போவாஸ் போவாஸ்
போர்வையால் என்னை மூடுமையா
இயேசய்யா இயேசய்யா
அன்பினால் என்னை மூடுமையா
1.
உந்தன் அடிமை நான் ஐயா என்னைக்
காப்பாற்றும் கடமை உமக்கையா – போவாஸ்
2.
நிறைவான பரிசு நீர் தானையா உம்
நிழல்தானே தங்கும் சொர்க்கமையா – போவாஸ்
3.
வேதனையோ வேறு சோதனையோ
எதுவுமே என்னை பிரிக்காதையா – போவாஸ்
4.
ஓய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்
வேறொரு வயல் நான் போவதில்லை – போவாஸ்
5.
கற்று தாரும் நான் கடைபிடிப்பேன்
சொல்வதை செய்து முடித்திடுவேன் – போவாஸ்
6.
போர்வை விரித்தேன் போடுமையா
கோதுமையால் என்னை நிரப்புமையா – போவாஸ்
7.
கருணைக் கண் கொண்டு நோக்குமையா உந்தன்
கனிமொழியால் தேற்றுமையா – போவாஸ்
8.
திருப்தியாக்கும் என் திருஉணவே
தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீரே – போவாஸ்